வெள்ளிக்கிழமைகளில் அரச ஊழியர்களுக்கு விடுமுறை?

வெள்ளிக்கிழமைகளில் அரச ஊழியர்களுக்கு விடுமுறை வழங்குவதற்கு யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தினேஸ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

எரிபொருள் தட்டுப்பாடு காரணமாகவும் மற்றும் நிதி நெருக்கடி நிலைமை காரணமாகவும் இந்த யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் அதிகாரிகள் மட்டத்தில் கலந்துரையடி வருவதாகவும், இதன்படி இறுதி முடிவுகள் எடுத்து அறிவிக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை வீடுகளில் பயிர் செய்களை ஊக்குவிக்க வேலைத்திட்டங்களை முன்னெடுக்கவுள்ளதாகவும், வெள்ளிக்கிழமை விடுமுறையை அவர்கள் அதற்காக பயன்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தப்படும் என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.

Related Articles

Latest Articles