வேட்டையாடிய அறுவர் கைது!

இரத்தினபுரி சிவனொளிபாதமலை வீதியில் சமனல வனத்தில் மிருகங்களை வேட்டையாடும் முயற்சியில் ஈடுபட்டிருந்த 6 சந்தேகநபர்களைப் பொலிஸார் கைது செய்துள்ளனர். இரத்தினபுரி வேவல்வத்தை மூக்குவரத்தை பிரதேசத்தில் சிறிய லொறியொன்றை நிறுத்திவிட்டு காட்டினுள் நுழைந்த இவர்கள் மிருகங்களைத் துப்பாக்கியால் சுட்டு அவற்றைத் தேடி அலைந்த திரிந்த போது பிரதேசவாதிகள் இவர்கள் தொடர்பில் பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர். இதனையடுத்து லொறியில் தப்பி செல்லும் போது கைது செய்யப்பட்டதாக பொலிஸார் நேற்று தெரிவித்தனர் கைது செய்யப்பட்ட ஆறு பேரும் நிவித்திகலை பிரதேசத்தை சேர்ந்த 25-–35 வயதைச் சேர்ந்தவர்களாவர்.

Related Articles

Latest Articles