மாகாணசபைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தாம் குற்றப்பின்னணி கொண்டவர்கள் அல்லர் என்பதை உறுதிப்படுத்தும் விதத்தில் பொலிஸ் சான்றிதழை வழங்கினால் அது சிறப்பாக இருக்கும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார்.
வேட்பாளராக களமிறங்குவதற்கு விண்ணப்பிப்பவர்களிடம் பொலிஸ் சான்றிதழ் பெறுவது கட்டாயமாக்கப்படும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச அறிவித்திருந்தார்.
இந்நிலையிலேயே ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளரும் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
” தவறிழைத்தவர்களுக்கு எமது கட்சி எப்படியும் வேட்புமனு வழங்காது. எனினும், பொலிஸ் அறிக்கையொன்றி பெற்று வேட்பு மனு வழங்கும் நடவடிக்கையில் தவறு இருக்காது என்றே நான் நினைக்கின்றேன்.” – எனவும் மத்தும பண்டார கூறியுள்ளார்.