வேட்பு மனு தாக்கல் செய்தது இதொகா!

உள்ளுராட்சிசபைத் தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் போட்டியிடுவதற்குரிய வேட்பு மனுவை இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் இன்று தாக்கல் செய்தது.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமானால் வேட்பு மனு கையளிக்கப்பட்டது.

நுவரெலியா மாவட்டத்தில், 2025 உள்ளுராட்சி மன்றம் தேர்தலில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் இம்முறை சேவல் சின்னத்தில் போட்டியிடுகின்றது. வலப்பனை பிரதேச சபைக்கு மாத்திரம் கதிரை சின்னத்தில் கூட்டணியாக களமிறங்குகின்றது.

நுவரெலியா மாநகரசபை, ஹட்டன்-டிக்கோயா நகரசபை, தலவாக்கலை-லிந்துலை நகரசபை , மஸ்கெலியா, நோர்வூட், கொட்டகலை, அக்கரபத்தனை, அம்பகமுவ, கொத்மலை, ஹங்குராகெத்த ஆகிய பிரதேச சபைகளுக்கு சேவல் சின்னத்தில் காங்கிரஸ் போட்டியிடுகின்றது.

நுவரெலியா மாவட்ட செயலகத்தில் தேர்தல் கடைமைகளுக்காக அமைக்கப்பட்டுள்ள பிரத்தியேக காரியாலயத்தில் தாக்கல் செய்யபட்டது.

Related Articles

Latest Articles