வேலுகுமாருக்காக இதொகாவுடன் ராதா முரண்பட்டால் அதனை எதிர்கொள்வதற்கும் தயார்!

ஞாயிற்று கிழமை நடந்த சம்பவத்திற்கு 5 நாட்கள் கடந்து இன்று வெள்ளிக்கிழமை அறிக்கை வெளியிடுவது வேலுகுமார் மீது இராதாகிருஷ்ணன் கொண்டுள்ள அக்கறையை வெளிக்காட்டுகிறது என இ.தொ.காவின் பிரதி தலைவர் கணபதி கனகராஜ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

“ ஒன்றிணைந்து போராடுவோம் என அழைப்பு விடுப்பது என்பது தொழிலாளர்களுக்காக அவர்களின் நலன் கருதி உண்மையாக குரல் எழுப்புபவர்களுக்கு மாத்திரம் தான். மாறாக கம்பனியின் தரகரான வேலுகுமார் போன்றவர்களுக்கு அழைப்பு விடுக்க முடியாது என சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

வேலுகுமார் தாக்கப்பட்டார், தாக்கப்பட்டார் என தெரிவிக்கின்றீர்களே! இச்சம்பவத்திற்கு பிறகு அவர் ஒரு பிளாஸ்டர் கூட அணியவில்லை என்பதை இந்நேரத்தில் தெளிவூட்டுகிறேன்.

வேலுகுமாருக்கு ஆதரவாக பேசும் நீங்கள், இ.தொ.காவின் பாசறையில் வளர்ந்து வந்தவர். இ.தொ.காவின் கொள்கை என்ன என்பது தாங்கள் அறிந்ததே. அவ்வாறு இருக்கும் நிலையில், தாங்கள் இ.தொ.காவில் தேர்தலில் போட்டியிட்ட போது தாங்களுக்காக போஸ்டர் ஒட்டி, கட்சி கொடியை தூக்கியவர்களை விமர்சிக்கிறீர்கள் என்பதை மறந்து விடக் கூடாது.

சம்பள பேச்சுவார்த்தையில் இ.தொ.காவிற்கும் மலையக மக்கள் முன்னணிக்கும் இதுவரை எவ்வித கருத்து வேறுபாடுகளும் கிடையாது. வேலுகுமாரால் இ.தொ.காவிற்கும் மலையக மக்கள் முன்னணிக்கும் கருத்து வேறுபாடு உருவாக்கப்படும் சூழ்நிலை அமைந்தால் அதை சந்திக்க இ.தொ.கா தயாராக உள்ளது.” எனவும் கணபதி கனகராஜ் தெரிவித்துள்ளார்.

 

Related Articles

Latest Articles