வைத்தியசாலையில் இருந்து வீடு திரும்பும் வழியில் விபத்து – தாயும், மகளும் பலி!

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் நேற்றிரவு இடம்பெற்ற கோர வாகன விபத்தில் தாயும், மகளும் பலியாகியுள்ளனர்.

அரச வங்கியொன்றில் உதவி முகாமையாளராக சேவையாற்றும் 32 வயதான பெண்ணும், அவரின் 57 வயதான தாயுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

தாய் கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் சிகிச்சைப்பெற்று வந்துள்ளார். அவரை அம்பலாந்தோட்டையில் உள்ள தமது வீட்டுக்கு வேனொன்றில் மகள் அழைத்துச் செல்லும் வழயிலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

தெற்கு அதிவேக வீதியில் பயணித்துக்கொண்டிருந்த இவர்களின் வேன், குருந்துகஹஹட்கெம பிரதேசத்தில் வைத்து, முன்னால் சென்ற கனரக லொறியில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

வேனில் சாரதிக்கு ஏற்பட்ட நித்திரை கலக்கத்தால் இவ்விபத்து இடம்பெற்றிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

விபத்தில் காயமடைந்த தாய் மற்றும் மகள் மற்றும் வேனின் சாரதி கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் தாயும் மகளும் உயிரிழந்தனர்.

Related Articles

Latest Articles