நிதி அமைச்சர் அலி சப்ரி, மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க மற்றும் நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன ஆகியோர் தலைமையிலான சர்வதேச நாணய நிதியத்துக்கான இலங்கைப் பிரதிநிதிகள் குழு இன்று (17) அதிகாலை வோஷிங்டன் நோக்கி பயணிமாகியுள்ளனர்.
அமெரிக்காவின் – வாஷிங்டனில் சர்வதேச நாணய நிதியத்துடனான ஆரம்ப கட்ட பேச்சு வார்த்தைகள் எதிர்வரும் 19ஆம் திகதி முதல் 24ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.