வெளிநாடு செல்லும் இலங்கையர்களுக்கு வெளியான முக்கிய தகவல்!

ஆட்கடத்தலை தடுக்கும் வகையில் இலங்கையர்கள் வேலைவாய்பிற்காக வௌிநாடு செல்லும் போது உயிரியளவியல் (Biometrics) தரவுகளை பெற்றுக்கொள்ள ஆட்கடத்தலை தடுக்கும் தேசிய செயற்குழுவின் ஆதரவுடன் தொழிலாளர் மற்றும் வௌிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு தீர்மானித்துள்ளது.

இதன் மூலம் வெளிநாட்டு வேலைவாய்ப்பு என்ற போர்வையில் இடம்பெறும் ஆட்கடத்தலில் இருந்து தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய முடியும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

2023 ஜனவரி மாதத்தில் 24,236 இலங்கையர்கள் வெளிநாட்டு வேலைகளுக்காக வெவ்வேறு நாடுகளுக்கு சென்றுள்ளனர்

உயிரியளவியல் (Biometrics) என்பது மனிதர்களின் உடல் அல்லது நடத்தை சார்ந்த உள்ளார்ந்த தனிப்பட்ட கூறுபாட்டைத் தனித்துவமான முறையில் அடையாளம் காண்பதற்கான அளவீடுகளும் கணக்கீடுகளும் சார்ந்த அறிவியல் முறையாகும்.

Related Articles

Latest Articles