ஸ்ரீலங்கா விமான சேவை நிறுவனத்தின் முன்னாள் தலைவர் கைது!

ஸ்ரீலங்கா விமான சேவை நிறுவனத்தின் முன்னாள் தலைவர் நிஷாந்த விக்கிரமசிங்க, இலஞ்ச, ஊழல் விசாரணைக் குழுவினரால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

மேற்படி விமான சேவை நிறுவனத்தின் இடம்பெற்றதாகக் கூறப்படும் மோசடி தொடர்பில் முன்னெடுக்கப்பட்டுவந்த விசாரணைக்கமையவே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர் சிராந்தி ராஜபக்சவின் சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Latest Articles