மலையக மக்களின் காணி உரிமைக்கான இயக்கத்தின் ஊடாக ஹட்டனில் சர்வதேச காணி தினத்தை முன்னிட்டு நிலமற்றோருக்கு நிலம் என்ற தலைப்பின் கீழ் ஒற்றுமையாய் குரல் கொடுப்போம் உரிமையை வென்றெடுப்போம் என்ற தொனிப்பொருளுக்கு அமைய இயக்கத்தின் தலைவர் தங்கவேலு கணேசலிங்கம் தலைமையின் கீழ் இடம்பெற்றது.
இந்நிகழ்வானது ஹட்டன் மல்லியப்பு சந்தியிலிருந்து மக்கள் பேரணியும்,வாகன பேரணியுமாக ஆரம்பிக்கப்பட்டு ஹட்டன் கிருஸ்ணபகவான் கலாச்சார மண்டபத்தில் நிறைவு பெற்றது.
குறித்த நிகழ்வில் மலையகத்தை சார்ந்த சிவில் அமைப்புகளும், சமூக ஆர்வாலர்களும்,பொதுமக்களும் கலந்து சிறப்பித்தனர்.குறித்த நிகழ்வில் மலையக மக்களின் காணி உரிமை தொடர்பாகவும் தற்போது நிலமற்று காணப்படுகின்ற சமூகம் எவ்வாறான அவலங்களை சந்திக்கின்றது என தெளிவுபடுத்தப்பட்டது.
மேலும் இந்நிகழ்வில் ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மனோகணேசன்,மலையக மக்கள் முன்னணியின் செயலாளர் நாயகம் பேராசிரியர் எஸ்.விஜயசந்திரன் உட்பட சர்வமத மதகுருமார்கள் உள்ளிட்ட ஏராளமான பொதுமக்கள் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.