ஹட்டனில் சர்வதேச பாடசாலையில் சிலம்பம்!

ஹைய்லெவல் சர்வதேச பாடசாலையில் (ஹட்டன்) சிலம்பம் ஓர் விளையாட்டாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
அதேபோல இலங்கையில் உள்ள தமிழ் பாடசாலைகளிலும் விளையாட்டுப் போட்டிகளின்போது சிலம்பம் ஓர் விளையாட்டாக அங்கீகரிக்கப்பட வேண்டும் என்று சிலம்பம் பயிற்றுவிப்பாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இவ்வாறு எல்லா பாடசாலைகளிலும் சிலம்பம் நடாத்தப்படும் பட்சத்தில் தேசிய ரீதியான விளையாட்டாக அது அங்கீகரிக்ககூடிய சூழ்நிலை உருவாகும். இதற்கான முழு வேலைத்திட்டமும் தற்போது முன்னெடுக்கப்பட்டுவருகின்றது என்று அகில இலங்கை சிலம்பம் சம்மேளனம் குறிப்பிட்டுள்ளது.

இந்தியா, மலேசியா சிங்கப்பூர் போன்ற நாடுகளில் இவ் விளையாட்டு தேசிய ரீதியில் அங்கீகரிக்கப்பட்டு பாடசாலைக்கிடையில் போட்டிகளாக நடத்தப்பட்டு வருகின்றது. இலங்கையிலும் சிலம்பம் தேசிய ரீதியில் அங்கீகரிக்கப்பட்டால் இலங்கையிலிருந்தும் தெற்காசிய மற்றும் ஆசிய போட்டிகளில் வீரர்கள் பங்குபற்றக்கூடிய வாய்ப்பு ஏற்படும்.

இவ் விளையாட்டினை கலையாக மட்டுமல்லாமல் விளையாட்டாகவும் எமது அடுத்த தலைமுறைக்கு கொண்டு சேர்க்கும் நோக்கில் அகில இலங்கை சிலம்பம் சம்மேளனம் இலங்கையில் செயற்பட்டு வருகின்றது.

Related Articles

Latest Articles