ஹட்டனில் இன்று (16) தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட இளைஞர் ஒருவரை பொதுமக்களும், ஹட்டன் பொலிஸாரும் இணைந்து காப்பாற்றியுள்ளனர்.
ஹட்டன் எபோட்ஸ்லி தோட்டபகுதியிலுள்ள நீர் வீழ்ச்சியில் பாய்ந்தே குறித்த இளைஞன் தற்கொலை செய்வதற்கு முயற்சித்துள்ளார்.
இவர் வட்டவளை, ரொத்தஸ்ட் பகுதியை சேர்ந்த 23 வயதுடையவர் என விசாரணையில் தெரியவந்துள்ளது.
பொதுமக்களும், பொலிஸாரும் இணைந்தே இவரை காப்பாற்றியுள்ளனர். இளைஞன் உள ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளாரா என்பதை அறிய மருத்துவ பரிசோதனை மேற்கொள்ள நீதிமன்ற அனுமதி பெறப்படவுள்ளது.
அத்துடன், குறித்த இளைஞனுக்கு பொலிஸார் ஆலோசனையும் வழங்கியுள்ளனர்.
பொகவந்தலாவ நிருபர்-எஸ்.சதீஸ்
குறிப்பு – (எந்தவொரு பிரச்சினைக்கும் தற்கொலை என்பது தீர்வல்ல, அது கோழைத்தனமான முயற்சி – முடிவாகும். போராடி வெல்வதே வாழ்க்கையாகும். அதேபோல் குறித்த இளைஞன் தொடர்பான படங்களை வெளியிடுவதை தவிர்த்துக்கொள்ளுங்கள். இனி வாழ நினைக்கும் அவருக்கு அது உளரீதியான தாக்கத்தையும்,அவதானத்தையும் ஏற்படுத்தக்கூடும். அவரின் முகம் தெரியாத விதத்தில் தூரத்தில் இருந்து எடுத்த படமொன்றையே நாம் செய்திக்காக பயன்படுத்தியுள்ளோம். ஏனைய படங்கள் கைவசம் இருந்தும் ஓர் இளைஞனின் எதிர்காலத்துக்காக அவற்றை நாம் பயன்படுத்தவில்லை.)