ஹட்டன் அபிவிருத்திக்கு ஒதுக்கப்பட்ட ரூ. 50 கோடி பத்திரமாக வீடு திரும்பியது: அநுரவை குலசாமியென்ற அந்த குலவிளக்கை தேடுகிறேன்

 

” 2026 பாதீட்டில், அபிவிருத்திக்கு ஒதுக்கப்பட்ட 1,380 பில்லியன் ரூபாயில், செப்டம்பர் 30 ஆம் திகதி வரை 385 பில்லியன் ரூபாய் மட்டுமே (27.9%) செலவு செய்ய பட்டுள்ளது. எஞ்சிய 995 பில்லியன் ரூபாயில், செலுத்தப்பட வேண்டிய கொடுப்பனவுகள் ஏதேனும் இருந்தால், அவற்றை கழித்து, எவ்வளவு தொகை மீதமாகி உள்ளது என்பதே கேள்வி.

பட்ஜட்டில் பெரும் எடுப்பில் நிதி ஒதுக்கீடு அறிவித்து, கைதட்டல், மலர் மாலை, ஜயமே-வா கோஷங்கள், வாங்க வேண்டியது. ஆனால் ஒதுக்கப்படும் நிதி பயன் படுத்த படாமல் திரும்புகிறது.

ஹட்டன் நகரில் ஒருவர், நடு வீதியில் அனுராவின் படத்தை வைத்து, “எங்கள் குல சாமி” என கை கூப்பி வணங்கினார். இப்போது ஹட்டன் அபிவிருத்திக்கு என ஒதுக்கிய 50 கோடியும், பயன்படுத்த படாமல் பத்திரமாக “வீடு திரும்பி” உள்ளது. “குல சாமி” என்று கொண்டாடிய அந்த “குலவிளக்கை” நான் தேடுகிறேன் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் எம்பி தெரிவித்துள்ளார்.

மனோ எம்பி இது தொடர்பில் மேலும் கூறியுள்ளதாவது,

” ஒதுக்க படும் நிதி பயனில்லாமல், திட்டம் இல்லாமல் திரும்பும் என்றால், கையாலாகாத அரசு என்பதற்கு இதை விட வேறு உதாரணம் தேவை இல்லை.

2026 வரவு செலவு திட்டத்தின் மூலதன செலவினங்களின் முன்னேற்றம் தொடர்பான அமைச்சு வாரியான விபரங்களை பெற்று தருமாறு பாராளுமன்ற செயலாளர் நாயகம் ஊடாக பொது நிதி குழு தலைவர் ஹர்ஷா டி சில்வாவிடம் கோரி உள்ளேன்

2026 பாதீட்டில், அபிவிருத்திக்கு ஒதுக்கப்பட்ட 1,380 பில்லியன் ரூபாயில், செப்டம்பர் 30 ஆம் திகதி வரை 385 பில்லியன் ரூபாய் மட்டுமே (27.9%) செலவு செய்ய பட்டுள்ளது.

எஞ்சிய 995 பில்லியன் ரூபாயில், செலுத்தப்பட வேண்டிய கொடுப்பனவுகள் ஏதேனும் இருந்தால், அவற்றை கழித்து, எவ்வளவு தொகை மீதமாகி உள்ளது என்பதே கேள்வி.

அதாவது, 2027 ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீடுகளுக்கு ஒப்புதல் வழங்க முன், கடந்த 2026ம் வருட ஒதுக்கீடுகளில் எவ்வளவு பயன் படுத்த பட்டது என்பதை அரசு பாராளுமன்றத்துக்கு கூற வேண்டும்.”என்றார்.

 

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles