ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு

ஹட்டன்- கொழும்பு  பிரதான வீதியின் கடவளை பகுதியில் பாரிய ​மரமொன்று முறிந்து வீதியில் விழுந்ததால் குறித்த வீதியுடனான போக்குவரத்து ஒரு வழிப்போக்குவரத்தாக மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

அத்துடன் தொலைபேசி கம்பங்களும் முறிந்து விழுந்துள்ளதாகவும் கினிகத்தேனை பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று (9) இரவு 9 மணியளவில் மரம் முறிந்து விழுந்தமையால் 1 மணித்தியாலம் இந்த வீதியுடனான போக்குவரத்து முற்றாக ஸ்தம்பிதம் அடைந்திருந்ததாகவும் பின்னர் பிரதேசவாசிகள் ​மற்றும் கினிகத்தேனை பொலிஸார் இணைந்து மரத்தை வெட்டி அகற்றிய நிலையில், தற்போது ஒரு வழி போக்குவரத்துக்கே பொலிஸார் அனுமதி வழங்கியுள்ளதாகத் தெரிவித்தனர்.

இதேவேளை குறித்த வீதியின் பல இடங்களில் மரங்கள் முறிந்து விழும் அபாயம் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Related Articles

Latest Articles