ஹட்டன் நகரில் கடைக்குள் புகுந்து கொள்ளை!

ஹட்டன் நகரில் கொள்ளைச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.

ஹட்டன் மணிகூட்டு கோபுரத்திற்கு அருகாமையில் அமைந்துள்ள தளபாடங்கள் மற்றும் இலத்திரனியல் உபகரணங்கள் விற்பனை செய்யப்படும் கடையொன்றிலேயே நள்ளிரவில் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

கடையில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த கை கடிகாரங்கள் உட்பட பொருட்கள் திருடப்பட்டுள்ளதாக ஹட்டன் பொலிஸ் நிலையத்தில் முறைபாடு செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த திருட்டு சம்பவம் தொடர்பில் ஹட்டன் பொலிஸார் மோப்ப நாயின் உதவியுடன் தேடுதல் வேட்டையை முன்னெடுத்துள்ளதாகவும் திருடர்கள் கடையின் பின்புறமாகவே கடையினுள் நுழைந்துள்ளதாகவும்,சம்பவம் தொடர்பாக கடையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கமராவில் காணொளிகள் பதிவாகியுள்ளதாக பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில் தெரியவந்துள்ளன.

கடையில் என்னென்ன பொருட்கள் களவாடப்பட்டுள்ளன என்பது தொடர்பாக சரியான விபரங்கள் தெரிவிக்கப்படவில்லை.

மலைவாஞ்சன்

Related Articles

Latest Articles