ஹட்டன் நகரில் கழிவகற்றும் பணி ஆரம்பம்!

ஹட்டன்/டிக்கோயா நகர சபையின் கீழ் இயங்கும் பிரதான நகரான  ஹட்டன் நகரத்தில்  கழிவு குப்பைகள் அகற்றி இந் நகரை அனைவரும் விரும்பத்தக்க சுத்தமான நகரமாக மாற்றியமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கடந்த நாட்களில் ஹட்டன் நகரில் போடப்படும் கழிவுகளை அகற்றுவதில் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கி வந்ததாக நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமானின் கவத்திற்கு கொண்டு வந்திருந்தனர்.

இதையடுத்து இவ்விடயம் தொடர்பாக உடனடியாக ஹட்டன் நகர சபை தலைவர் பாலச்சந்திரன் மற்றும் நகரசபை உறுப்பினர் ரட்ணகுமார் ஆகியோருடன்    ஜீவன் தொண்டமான் நேற்று கலந்துரையாடல் மேற்கொண்டிருந்தார்.

இதையடுத்து கழிவு குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டதுடன், ஹட்டன் பொது சுகாதார அதிகாரி பாலசுப்பிரமணியத்தின் கண்கானிப்பின் ஊடாக கழிவுகளை அகற்றும் பணி நேற்று இடம்பெற்றது.

மேலும் ஹட்டன் நகரத்தில் சேகரிக்கும் குப்பைகளில் பொலித்தின்,க டதாசி,போத்தல்கள்,பிளாஸ்டிக் என உக்கும்,உக்கா  கழிவு பொருட்கள் என வகை பிரித்து இடுமாறு ஹட்டன் நகரசபை நகரமக்களிடம்  வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளதை மக்கள் பின்பற்றும்மாறும் பாராளுமன்ற உறுப்பினர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அத்தோடு ஹட்டன் நகரில் இடம்பெறும் ஞாயிறு சந்தை தொகுதியின் கழிவுகளை அகற்றிய பின்னர் எதிர்காலத்தில்  அவ்விடத்தில் சந்தைதொகுதியை வழமைபோல இயங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன்,

ஹட்டன் நகரம் மற்றும் அதை அன்மித்த பகுதிகளில் சேகரிக்கப்படும் கழிவு பொருட்களை படிப்படியாக அகற்றவும் ஜீவன் தொண்டமான் நடவடிக்கை எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles