ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியில் குடாஒயா பகுதியில் ஆட்டோவொன்று பிரதான பாதையில் இருந்து விலகி – சுமார் 30 அடி பள்ளத்தில் வீழ்ந்து இன்று அதிகாலை விபத்துக்குள்ளகியுள்ளது.
கொழும்பில் இருந்து வெலிமடை நோக்கி பயணித்துக்கொண்டிருந்த ஆட்டோவே இவ்வாறு விபத்துக்குள்ளானது.
விபத்தின் போது மூவர் ஆட்டோவில் இருந்துள்ளனர். சிறுகாயங்களுடன் அவர்கள் உயிர் தப்பியுள்ளனர்.
