ஹட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பன்மூர் குளத்திலிருந்து இன்று (22) காலை ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
ஹட்டன் வனராஜா தோட்டத்தைச் சேர்ந்த 58 வயதான, இரண்டு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குளத்தில் சடலம் மிதப்பதைக் கண்ட தோட்டத் தொழிலாளர்கள், அது குறித்துக் காவல்துறையினருக்குத் தகவல் தெரிவித்துள்ளனர். அதனடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் கள விசாரணைகளை மேற்கொண்டனர்.
குளக்கரையிலிருந்து உயிரிழந்தவருக்குச் சொந்தமானது எனச் சந்தேகிக்கப்படும் பாதணிகள் குடை, மற்றும் பேஸ் ஆகியவை மீட்கப்பட்டுள்ளன.
மரணத்திற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. இது தொடர்பில் ஹட்டன் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.










