ஹட்டன் ஹைலன்ஸ் கல்லூரி மாணவன் உலக சாதனை!

கொட்டகலையைச் சேர்ந்த பிரபாகர் – ரெஷ்னி தம்பதிகளின் புதல்வர் லவ்னீஷ் மிக இள வயதில் உலக வரைபடத்தில் உள்ள நாடுகளை அடையாளம் காணும் சாதனையை படைத்துள்ளார்.அதி வேகமாக உலக நாடுகளை அடையாளம் காணுவதில் இந்த சாதனை நிலைநாட்டியுள்ளார்.

உலக வரைப்படத்தின் அனைத்து நாடுகளையும் துல்லியமாக அடையாளம் காட்டி அவர் இந்த சாதனையை நிலைநாட்டியுள்ளார்.

எவ்வித அடையாளங்களோ அல்லது எந்தவிதமான எழுத்துக்களோ இல்லாத நிறங்களில் மட்டும் நாடுகள் அடையாளப்படுத்தப்பட்ட உலக வரைபடத்தில் லவ்னீஷ் இந்த சாதனையை நிலைநாட்டியுள்ளார்.

இவ்வாறு உலக நாடுகளை அடையாளம் காட்டுவதற்காக லவ்னீஷ், 3 நிமிடங்கள் மற்றும் 16 செகன்களை மட்டுமே எடுத்துக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவரது தந்தை ஓர் கணனி போதனாசிரியர் என்பதுடன், தாய் லிந்துலை-தலவாக்கலையின் மருத்துவர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்பொழுது கொட்டகலை பிரதேசத்தில் வசித்து வரும் லவ்னீஸ் ஹட்டன் ஹைலன்ஸ் கல்லூரியில் கல்வி கற்று வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.5 வயது 7 மாதங்கள் 27 நாட்களில் அவர் இந்த சாதனையை நிலைநாட்டியுள்ளார்.

கடந்த 2018ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 30ம் திகதி இந்த சாதனை நிகழ்த்தப்பட்ட போதிலும், உலக சாதனை புத்தகத்தில் நேற்றைய தினமே இந்த சாதனை அங்கீகரிக்கப்பட்டது.

Related Articles

Latest Articles