ஹப்புத்தளையில் 34 பேருக்கும், பசறையில் 19 பேருக்கும் கொரோனா

பசறை பகுதியில் மேலும் 19 பேருக்கு இன்று கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனை முடிவுகள் இன்று வெளியாகின. இதில் 19 பேருக்கு வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.

இவர்களில் 17 பேர் கோணக்கலை பிளார்னிவத்த தோட்டத்தைச் சேர்ந்தவர்களென பிரதேச பொது சுகாதார மேற்பார்வை பரிசோதகர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

இதுவரை பிளார்னிவத்த தோட்டத்தில் 32 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. தொற்றுறுதியானவர்களை தனிமைப்படுத்தல் சிகிச்சை நிலையங்களுக்கு அனுப்பி வைப்பதற்கான நடவடிக்கைகளை பொதுசுகாதார பரிசோதகர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

அதேவேளை, ஹப்புத்தளை பொதுசுகாதார பிரிவில் கடந்த 10 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் மாதிரி பரிசோதனையில் 34 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இன்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

நடராஜா மலர்வேந்தன்

Related Articles

Latest Articles