ஹப்புத்தளை பிரதேச சுகாதாரப் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் ஒன்பது பேர், கோவிட் 19 தொற்றுக்கிழக்காகியுள்ளமை, 26-04-2021ல் (இன்று) மேற்கொள்ளப்பட்ட ‘என்டிஜன்’ பரிசோதனையில் தெரியவந்துள்ளதாக, பிரதேச பொது சுகாதாரப் பரிசோதகர் சுப்ரமணியம் சுதர்ஷன் தெரிவித்தார்.
தொற்று உறுதியானவர்களில் தங்கமலை பெருந்தோட்டத்தில் தாயொருவரும், அவரது மகனும் உள்ளடங்கியுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
தொற்று உறுதியானவர்களுடன் தொடர்பினைப் பேணிய, 13 குடும்பத்தைச் சேர்ந்த 19 பேர் சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இவர்கள் அவரவர்களுடைய வீடுகளிலேயே தனிமைப்படுத்தப்பட்டிருக்கின்றனர். அவ்வீடுகளுக்கு வேறு எவரும் செல்லாத வகையில் சுய தனிமைப்படுத்தல் அறிவித்தல்களும் இன்று 26-04-2021ல் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
மேலும், அப்பகுதியில் 31 பேருக்கு 26-04-2021ல் பி.சி.ஆர். பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுவதாகவும், பொது சுகாதாரப் பரிசோதகர் தெரிவித்தார்.
எம். செல்வராஜா, பதுளை
