ஹப்புத்தளையில் காயங்களுடன் ஆண் சடலமாக மீட்பு!

ஹப்புத்தளை, யஹலபெத்த – பல்லேகும்புர பாலத்திற்கு அருகில் உள்ள வீதியில் இருந்து ஆணொருவரின் சடலம் இன்று காலை மீட்கப்பட்டுள்ளது என்று பொலிஸார் தெரிவித்தனர்.

ஹப்புத்தளை, யஹலபெத்த, கிரிவடுஹின்ன பகுதியைச் சேர்ந்த 40 வயதான டி.எம். சமன் திஸாநாயக்க என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

ஹப்புத்தளை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து சம்பவ இடத்துக்கு சென்ற பொலிஸ் அதிகாரிகள், ஸ்தல பரிசோதனைகளை மேற்கொண்டனர். உயிரிழந்த நபரின் தலை மற்றும் கைகளில் காயங்கள் இருந்தன என்று பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த நபரின் மரணத்திற்கான காரணம் இதுவரையில் கண்டறியப்படவில்லை எனவும், சடலம் பிரேத பரிசோதனைக்காக ஹப்புத்தளை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

பண்டாரவளை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்  பிரதீப் களுபஹனவின் ஆலோசனைக்கமைய,  ஹப்புத்தளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியான பிரதான பொலிஸ் பரிசோதகர் சேபால ரத்நாயக்கவின் தலைமையில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.

ராமு தனராஜ்

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles