ஹமாஸ் இயக்கத்தை முற்றாக ஒழிக்கும் வரை போரை நிறுத்தப்போவதில்லை என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மீண்டும் சூளுரைத்துள்ளார்.
“ நாங்கள் ரபா நகருக்குச் செல்வோம், போரில் இருந்து விலக போவதில்லை, எனக்கென ஒரு சிவப்பு கோடு உள்ளது, அது என்னவென்பதும் உங்களுக்கு தெரியும், கடந்த ஒக்டோபர் 7ஆம் திகதியன்று எதிர்பாராத வேளையில் நடந்த பிரச்சினை மீண்டும், ஒருபோதும் நடக்காமல் இருப்பதற் கான விடயத்தையே நாங்கள் முன்னெடுத்துள்ளோம்” – என்றும் அவர் குறிப்பிட்டார்.
இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்புக்கு இடையே நடந்து வரும் கடுமையான போர் சூழலிடையே, அமெரிக்க ஜனாதி பதி பைடன் அளித்த பேட்டியின்போது, உயிரிழப்புகளை குறைக்க தவறிய நெதன்யாகு, இஸ்ரேலுக்கு உதவுவதற்கு பதிலாக கூடுதலாக வலியை ஏற்படுத்தி வருகிறார் என்று கூறியிருந்தார்.
“போர் நிறுத்தத்தை நடைமுறைப்படுத்துமாறு வலியுறுத் தியபோதும் அதனை ஏற்காமல் தொடர்ந்தும் போர் நடவடி க்கைகளை முன்னெடுத்து வருகிறார். இது இஸ்ரேலின் நிலைப்பாட்டுக்கு முரணானது, அது ஒரு பெரிய தவறு என்றே நான் நினைகின்றேன். சர்வதேச நிலைப்பாட்டின் மீது இஸ்ரேல் ஏற்படுத்திய தாக்கத்திற்கு நான் கவலையடைகின்றேன். 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பலஸ்தீனியர்கள் உயிரி ழந்ததனை ஏற்றுக்கொள்ள முடியாத சூழல் உருவாகி யுள்ளது.” என்று பைடன் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, போரானது நான்கில் 3 பங்கு நிறைவ டைந்து விட்டது என்றும், இன்னும் ஒரு மாதத்திற்குள் போர் முடிவுக்கு வந்து விடும், 6 அல்லது 4 வாரங்கள் அதற்கு எடுக்கும் என்று நெதன்யாகு கூறியுள்ளார்.