ஹரினின் செயல் அருவருக்கதக்கது – சஜீத் சீற்றம்

எமது கட்சியின் தீர்மானத்தை மீறி அரசு பக்கம் சாய்ந்து அமைச்சுப் பதவிகளைப் பெற்றுக்கொண்ட ஹரீன் பெர்னாண்டோ மற்றும் மனுஷ நாணயக்கார ஆகியோருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும். இவர்கள் இருவரினதும் இந்தச் செயற்பாடு மிகவும் அருவருக்கத்தக்கது என எதிர்க்கட்சித்தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாஸ தெரிவித்தார். இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவித்ததாவது,

பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசின் நல்ல கருமங்களுக்கு ஐக்கிய மக்கள் சக்தி எதிரணியில் இருந்துகொண்டு ஆதரவு வழங்கும் எனவும், அமைச்சுப் பதவிகளை ஏற்பதில்லை எனவும் நாம் ஏற்கனவே முடிவெடுத்திருந்தோம்.

இந்நிலையில், ஹரீன் பெர்னாண்டோவும், மனுஷ நாணயக்காரவும் எமது கட்சியின் முடிவை மீறிச் செயற்பட்டுள்ளதால் அவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும்.

இந்நிலையில், ஹரீனுக்கும் மனுஷவுக்கும் அமைச்சுப் பதவிகளை அரசு வழங்கியுள்ளதால் அரசுக்கான எமது ஆதரவு தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தி கூடி பரிசீலிக்கும் என்றார்.

Related Articles

Latest Articles