“ இலங்கையானது இந்தியாவின் பிராந்தியம் அல்ல. அவ்வாறு பிராந்தியம் என அமைச்சர் கருத்து வெளியிட்டிருந்தால் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி அதனை வன்மையாகக் கண்டிக்கின்றது.” – என்று சுதந்திரக் கட்சியின் பதில் பொதுச்செயலாளரான துஷ்மந்த மித்ரபால தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
“ அமைச்சர் (ஹரின் பெர்ணான்டோ) எந்த நோக்கில் அந்த கருத்தை வெளியிட்டார் என தெரியவில்லை. அது பற்றி நான் முழுமையாக ஆராயவில்லை. எனினும், இலங்கையென்பது இந்தியாவின் பிராந்தியம் கியைடாது.
அதேபோல ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி இந்திய விரோத போக்கை கடைபிடிக்கும் கட்சி அல்ல. பொருளாதாரம் சார்ந்த விடயங்களின்போது ஒத்துழைத்து செயற்படலாம்.” – என்றார்.
அதேவேளை, சுதந்திரக்கட்சிக்கு எதிராக தொடுத்துள்ள வழக்கை தயாசிறி ஜயசேகர நீக்கிக்கொண்டால் அவர் சுதந்திரக்கட்சி தலைமையிலான கூட்டணியில் இணையலாம். அதற்கு தடை இல்லை எனவும் துஷ்மந்த மித்ரபால கூறினார்.
