ஹரியானா மாநில ஆளுநர் பண்டாரு தத்தாத்திரேயாவை, அண்மையில் இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்ட போது இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் மற்றும் பெருந்தோட்டப்பிராந்தியங்களுக்கான பிரதமரின் இணைப்புச் செயலாளர் செந்தில் தொண்டமான் ஆகியோர் சந்தித்து கலந்துரையாடல் நடத்தினர்.
இந்தச் சந்திப்பில் ஹரியானா மாநிலத்தின் வளர்ச்சித் திட்டங்கள் குறித்து இருதரப்பினரும் கலந்துரையாடினர்.
இந்தியாவில் தொழில்துறையில் முன்னணி மாநிலமாக ஹரியானா மாநிலம் உள்ளது. கிழக்கு மாகாண மற்றும் மலையகத்தில் பின்தங்கிய பிரதேசங்களில் தொழில் பேட்டைகள் அமைப்பது தொடர்பாகவும், வருமானம் குறைந்த குடும்பங்களுக்கு பால் உற்பத்தி போன்ற சுயதொழில் ஊடாக பொருளாதாரத்தை மேம்படுத்துவது குறித்தும் இருதரப்பினரும் கலந்துரையாடலை மேற்கொண்டனர்.
இக்கலந்துரையாடலின் போது, ஹரியானா அரசு இவ் அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுக்க உதவி வழங்குவதாக உறுதியளித்தது.