அமெரிக்க தாக்குதலால் சீற்றமடைந்துள்ள ஈரான் உலகளவில் 20 சதவீத கச்சா எண்ணெய் போக்குவரத்து நடைபெறும் ஹார்முஸ் ஜலசந்தியை மூடப்போவதாக எச்சரிக்கை விடுத்துள்ளது.
அணு ஆயுத தயாரிப்பில் தீவிரமாக உள்ளது என கூறி ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது.
இந்நிலையில் கச்சா எண்ணெய் ஏற்றுமதி வழித்தடத்தில் முக்கிய அங்கம் வகிக்கும் ஹோமுஸ் ஜலசந்தியை மூடப்போவதாக ஈரான் மிரட்டல் விடுத்துள்ளது.
சவுதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், குவைத் மற்றும் ஈராக் போன்ற பெட்ரோலியப் பொருட்கள் ஏற்றுமதி செய்யும் நாடுகள் எல்லாம் ஈரான் மற்றும் ஓமன் இடையே உள்ள குறுகலான ஹோமுஸ் ஜலந்தியைத்தான் பயன்படுத்துகின்றன.
உலகளாவிய எண்ணெய் ஏற்றுமதியில் 20 சதவீதம் இந்த வழித்தடம் வழியாகத்தான் நடைபெறுகிறது. நாள் ஒன்றுக்கு 18 மில்லியன் பேரல் கச்சா எண்ணெய் இந்த வழியாக செல்கிறது.
கடந்த 2012-ம் ஆண்டு ஈரானுக்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் தடை விதித்தபோது, ஹோமுஸ் ஜலசந்தி வழித்தடத்தை மூடுப்போவதாக ஈரான் மிரட்டல் விடுத்தது. ஆனால், அதை செய்யவில்லை.
ஆனால் அந்த வழியாகச் சென்ற இஸ்ரேல் எண்ணெய் கப்பல் தாக்கப்பட்டது. சில கப்பல்களை ஈரான் சிறை பிடித்தது. இந்த முறை ஹோமுஸ் ஜலசந்தியை மூடினால் அது கச்சா எண்ணெய் போக்குவரத்தில் உலகளாவிய நெருக்கடியை ஏற்படுத்தும். இந்தியா 40 சதவீத கச்சா எண்ணெய், 50 சதவீத இயற்கை எரிவாயு ஆகியவற்றை இந்த வழியாகத்தான் பெறுகிறது.
இதனால் இந்தியா மற்றும் ஒபெக் நாடுகளுக்கு பெரும் பாதிப்பு ஏற்படும்.
அதேவேளை, ஹோர்முஸ் நீரிணையை மூடும் ஈரான் அரசின் முடிவை திரும்பப் பெற வலியுறுத்துமாறு சீனாவிடம், அமெரிக்கா கோரிக்கை விடுத்துள்ளது.