ஹாலிஎல வீரசக்தி பெருமான் ஆலய ஆடி மகோற்சவம் நாளை ஆரம்பம்!

ஹாலிஎல ஶ்ரீ வீரசக்தி பெருமான் ஆலயத்தின் ஆடி மகோற்சவத் திருவிழா நாளை 30ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மு.ப. 10.35 தொடக்கம் 12.05 வரையுள்ள சுபநேரத்தில் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி 5 நாட்களுக்கு நடைபெறவுள்ளது.

31ஆம் திகதி புதன்கிழமை காலை 1008 சங்காபிஷேகப் பூஜையைத் தொடர்ந்து ஹாலிஎல புகையிரத நிலையத்திற்கு அருகில் உள்ள அம்மன் ஆலயத்திலிருந்து பாற்குட பவனி , பறவை காவடி, என்பவை ஆரம்பமாகி ஆலயத்தை வந்தடைந்ததும்,  சுவாமி உள்வீதி வலம் வருதலும், மகேஸ்வரப் பூஜையும் இடம்பெறும்.

செப்டம்பர் 1ஆம் திகதி விநாயகர், முருகன், மாரியம்மன் ஆகிய கடவுளர்களை ஒன்றிணைத்த முத்தேர் பவனி இடம்பெறும். 2ஆம் திகதி காலை பொற்சுன்னம் இடிக்கப்பட்டு ஹாலிஎல ஆற்றங்கரையில் தீர்தோற்சவம் இடம்பெறும். 30ஆம் திகதி வைரவர் பூஜையுடன் ஆடி உற்சவம் இனிதே நிறைவு பெறும்.

Related Articles

Latest Articles