ஹிஷாலினியின் சடலம் புதைக்கப்பட்ட இடத்துக்கு விசேட பாதுகாப்பு

நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதினின் வீட்டில் வேலைசெய்த நிலையில் தீக்காயங்களுடன் மர்மமான முறையில் உயிரிழந்த மலையக சிறுமியான ஹிஷாலினியின் சடலம், மேலதிக விசாரணை, பரிசோதனைக்காக இன்று தோண்டியெடுக்கப்படவுள்ளது.

புதைக்கப்பட்ட சடலத்தை தோண்டியெடுத்து, மீள் பரிசோதனை நடத்துவதற்கு நீதிமன்றம் நேற்று அனுமதி வழங்கியிருந்தது.

அத்துடன், ஹிஷாலினியின் சடலம் புதைக்கப்பட்ட இடத்துக்கு டயகம பொலிஸாரால் விசேட பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

Related Articles

Latest Articles