ஹெரோயின் போதைப்பொருளுடன் பதுளையில் இருவர் கைது!

11, 880 மில்லிகிராம் ஹெரோயினுடன் இரண்டு சந்தேகநபர்கள் பதுளை பொலிஸின் போதைப்பொருள் தடுப்பு பிரிவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர் .

கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேக நபர்களில் ஒருவர் பதுளை, பசறை வீதி, 2 கட்டை பகுதியை சேர்ந்த 42 வயதுடையவர் எனவும், பதுளை ஹிந்தகொடவில் வைத்து கைது செய்ததாகவும் கைதுசெய்யும் போது சந்தேக நபரிடம் இருந்து 5670 மில்லி கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மற்றைய சந்தேக நபர் கொழும்பில் இருந்து பதுளை நோக்கி பயணித்த பேருந்தில் 6210 மில்லிகிராம் ஹெரோயினுடன் வந்த போது பதுளை பிரதான பஸ் நிலையத்தில் வைத்து கைது செய்ததாகவும் குறித்த சந்தேக நபர் புட்கேகந்த பிரதேசத்தை சேர்ந்த 27 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்தனர்.

பதுளை போதைப்பொருள் தடுப்பு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமையவே இரு சந்தேக நபர்களும் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பதுளை பொலிஸார் தெரிவித்தனர்.

மேலதிக விசாரணைகளை மேற்கொண்டதன் பின்னர் பதுளை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக பதுளை பொலிஸார் தெரிவித்தனர்.

ராமு தனராஜ்

Video thumbnail
அநுர குமாரவின் கட்சியில் குடும்ப உறுப்பினர்கள் இல்லையா?
58:18
Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39

Related Articles

Latest Articles