“ஈசி கேஸ்” முறையில் ஹெரோயின் போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்ட கணவன் மற்றும் மனைவி ஆகியோர் பதுளை பிராந்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவுவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர் என பதுளை பொலிஸார் தெரிவித்தனர்.
இவர்களிடம் இருந்து 15700 மில்லி கிராம் ஹெரோயின் போதைப் பொருள் மீட்கப்பட்டுள்ளதாகவும் 47 வயதுடைய ஆணும், 37 வயதுடைய பதுளை ஹப்புஹின்ன பகுதியை சேர்ந்த பெண்ணுமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்கள் இருவரும் ஏற்கனவே திருமணம் ஆனவர்கள் எனவும், இருவரும் தமது குடும்பத்தினை கைவிட்டுவிட்டு கணவன் மனைவியாக பசறை புத்தலை வீதியில் வீடொன்றை வாடகைக்கு எடுத்து வாழ்ந்து வருவதாகவும் இவர்கள் பதுளையை அண்மித்த பகுதிகளுக்கு ஹெரோயின் விற்பனையில் ஈடுபடுவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
பொலிஸார் 5000 ரூபா ; பணத்தை ஈசி கேஸ் மூலம் அனுப்பி பசறை பதுளை வீதியில் 7 ம் கட்டை பகுதியில் வைத்து சந்தேக நபரிடம் இருந்து 130 கிராம் ஹெரோயின் போதைப் பொருளை பெற்று கொண்ட பொலிஸார் குறித்த நபரை கைது செய்து அவரிடம் சோதனைகளை மேற்கொண்ட போது அவரிடம் இருந்து மேலும் 7400 மில்லி கிராம் ஹெரோயின் போதைப் பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் அத்துடன் 12000 ரூபாய் பணமும் கையட்டக்க தொலைபேசி ஒன்றும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பின்னர் அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் பசறை புத்தல வீதியில் வாடகைக்கு பெற்றுக் கொண்ட வீட்டில் சோதனையை மேற்கொண்ட போது குறித்த வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 8300 மில்லி கிராம் ஹெரோயின் போதைப் பொருள் மீட்கப்ட்டுள்ளதுடன் குறித்த நபரின் காதல் மனைவியும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக நபர்களிடம் விசாரணைகளை மேற்கொண்டதன் பின்னர் நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக பதுளை பொலிஸார் தெரிவித்தனர்.
ராமு தனராஜா