ஹாலிஎல, ஜெயகம பகுதியில் ஹெரோயின் போதை பொருள் விற்பனையில் ஈடுபட்ட பெண் ஒருவரை கைது செய்துள்ளதாக ஹாலிஎல பொலிஸார் தெரிவித்தனர் .
65 வயதுடைய அங்கவீனமுடைய பெண் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
ஹாலிஎல, பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைய குறித்த பகுதிக்கு விரைந்து சந்தேக நபரின் வீட்டை சோதனைக்கு உட்படுத்திய போது மறைத்து வைத்திருந்த
5270 மில்லிகிராம் ஹெரோயின் போதை பொருள் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்
மேலும் ஹெரோயின் போதைப் பொருள் பாவனைக்கு பயன்படுத்தப்படும் சில உபகரணங்களும் மீட்கப்பட்டுள்ளதாகவும்
மேலும் பெண்ணின் வீட்டில் ஹெரோயின் போதை பொருள் பாவிப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் குறித்த வீட்டில் செய்யப்பட்டிருந்ததாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
சந்தேக நபரிடம் விசாரணைகளை மேற்கொண்டதன் பின்னர் பதுளை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
தனராஜா டிமேஷன்