அடாவடியில் ஈடுபட்ட உதவி முகாமையாளரை உடன் கைது செய் – நாடாளுமன்றத்தில் எம்.பிக்கள் போராட்டம்!

மாத்தளை, ரத்தவத்த தோட்டத்தில் அடாவடியில் ஈடுபட்ட தோட்ட உதவி முகாமையாளர் உடன் கைது செய்யப்பட வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் வலியுறுத்தினார். நாடாளுமன்றம் இன்று முற்பகல் 9.30 மணிக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடியது.

இதன்போது ஒழுங்கு பிரச்சினையொன்றை எழுப்பிய வடிவேல் சுரேஷ் எம்.பி.,

” மாத்தளை, ரத்வத்த தோட்டத்தில் உதவி முகாமையாளர் ஒருவரால் வீடொன்று அடித்து நொறுக்கப்பட்டுள்ளது. குழந்தைகள் கதறி அழுதனர். சமைத்து உணவுகூட வீசப்பட்டுள்ளது. இது மிகவும் கொடூரமாகும். அவர் உடன் கைது செய்யப்பட வேணடும்.” எனவும் அவர் வலியுறுத்தினார்.

நாடாளுமன்ற உறுப்பினர் வீ. இராதாகிருஷ்ணனும் இந்த வலியுறுத்தலை விடுத்தார்.

அதேவேளை, இச்சம்பவத்தின் பின்னர் மலையக எம்.பிக்கள், கூட்டமைப்பு எம்.பிக்கள் உள்ளிட்டோர் இணைந்து சபைக்கு நடுவில் வந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். ஐக்கிய மக்கள் சக்தியினரும் போராட்டத்தில் இணைந்துகொண்டனர்.

 

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles