அடாவடி மற்றும் பூச்சாண்டி அரசியலுக்கு நாம் அஞ்சமாட்டோம் – என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நுவரெலியா மாவட்ட வேட்பாளர் முத்தையா பிரபு தெரிவித்தார்.
நுவரெலியாவில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக்கூட்டமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர் இது தொடர்பில் மேலும் கூறியதாவது,
இத்தேர்தல் ஊடாக மலையகத்தில் நிலையானதொரு மாற்றம் வரவேண்டும். அதனை செய்வதற்கு நாம் தயாராகிவருகின்றோம்.
ஆனால் இங்கு சிலர் அடாவடி அரசியல் நடத்துகின்றனர். பூச்சாண்டிகாட்டிக்கொண்டிருக்கின்றனர். இதற்கெல்லாம் நாம் அஞ்சமாட்டோம். இவர்கள் சொந்த தேவைகளுக்காகவே அரசியல் செய்கின்றனர். ஆனால், நாம் மக்களுக்காக அரசியல் செய்கின்றோம்.
நுவரெலியாவில் ஒரு தமிழ் தேசியப்பாடசாலை இல்லை. பல வருடங்களாக ஒரே கதையைத்தான் மீண்டும், மீண்டும் கூறிவருகின்றனர். இந்நிலைமை மாறவேண்டும். ” – என்றார்.
