அடுத்து என்ன? தமிழ்த் தேசியக் கட்சிகள் நாளை இறுதி முடிவு!

தமிழ்த் தேசியக் கட்சிகளின் அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பான அறிவிப்பு நாளை வியாழக்கிழமை அறிவிக்கப்படவுள்ளது.

யாழ்ப்பாணத்தில் இன்று கூடிய தமிழ்த் தேசிய அணிகள், தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் தொடர்பில் கலந்துரையாடின.

தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் தொடர்பான நீதிமன்ற உத்தரவு நாளை பிறப்பிக்கப்பட இருக்கின்ற நிலையில், தீர்ப்பு வெளியான பின்னர் தமிழ்க் கட்சிகள் மீண்டும் கூடவுள்ளன.

இக்கூட்டத்திலேயே அடுத்தக்கட்ட நகர்வுகள் தொடர்பான அறிவிப்பு விடுக்கப்படும்.

Paid Ad