அடுத்த ஜனாதிபதி தேர்தலில் ரணிலுக்கு 90 லட்சம் வாக்குகள் – பாலித தெவரப்பெரும ஆருடம்

அடுத்த ஜனாதிபதி தேர்தலில் 90 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகளை தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பெறுவார் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினரும், முன்னாள் இராஜாங்க அமைச்சருமான பாலித தெவரப்பெரும தெரிவித்தார்.

” ரணில் விக்கிரமசிங்க தூரநோக்கு சிந்தனை உடைய அரசியல்வாதி. ஆசியாவிலேயே மிகவும் சிறந்த ஆளுமை அவர். உலகை ஆளக்கூடிய வல்லமைகூட உள்ளது. குடும்ப அரசியல் நடத்தியவர் கிடையாது.

எமது நாட்டை நெருக்கடியில் இருந்து அவர் மீட்டார். மக்களுக்கும் இது தெரியும். எனவே, அடுத்த ஜனாதிபதி தேர்தலில் அவர் அமோக வெற்றிபெறுவார். கடைசியில் சஜித் பிரேமதாசவும் ரணில் பக்கம் வருவார்.” எனவும் பாலித தெவரப்பெரும குறிப்பிட்டார்.

Related Articles

Latest Articles