அடுத்த ஜனாதிபதி தேர்தலுக்கான வெற்றி ஆயுதமா ’13’?

ரணில் விக்கிரமசிங்க தொடர்ந்தும் தான் ஜனாதிபதியாக வருவதற்கான திட்ட மாகவே 13ஆம் திருத்தச்சட்டத்தை தாம் முழுமையாக நடைமுறைப்படுத்த முயல்கிறார் என்ற ஒரு மாயத் தோற்றத்தை ஏற்படுத்துகின்றார். அவர் அரசியல் தீர்வையும் பெற்றுத் தரமாட்டார் என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன்
தெரிவித்துள்ளார்.

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் இளைஞர் அணியின் புதிய நிர்வாகத்தெரிவு கிளிநொச்சி மாவட்ட தமிழ் தேசியக்கூட்டமைப்பின் கட்சி அலுவலகத்தில் நேற்று
நடைபெற்றது. இதன் போது உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இவ் நிர்வாகத் தெரிவில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன், கரைச்சி பிரதேச சபையின் முன் னாள் தவிசாளர் வேழமாலிதன், முன்னாள் வடமா
காணக் கல்வி அமச்சர் தம்பிராசா குருகுலராஜா மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Latest Articles