” அடுத்த தேர்தலில் சிறுபான்மைக் கட்சிகளே தீர்மானிக்கும் சக்தி” – திகா

அடுத்த ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாசவே வெற்றிபெறுவார், அவருக்கே தமது அணி ஆதரவு வழங்கும் என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரம் தெரிவித்தார்.

ஹட்டன் பகுதியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

” இந்த அரசுமீது மக்கள் அதிருப்தியில் உள்ளனர். புதிய, புதிய சட்டங்களை கொண்டுவந்து மக்களை ஒடுக்குவதற்கு ஆளுந்தரப்பு முற்படுகின்றது. எனவே, அடுத்த தேர்தலில் ஆளுங்கட்சி தோல்வி உடைவது உறுதி.

நாம் சஜித்தை ஆதரிப்போம். மலையக பெருந்தோட்ட மக்களை சிறுதோட்ட உரிமையாளர்களாக்குவேன் என அவர் உறுதியளிப்பார். அடுத்த தேர்தலில் சஜித் வெற்றிபெற்ற பின்னர் இதனை நாம் நிச்சயம் செய்வோம். மக்களே அச்சப்பட வேண்டாம், அடுத்து வருவது எமது ஆட்சியாகவே இருக்கும்.

சிறுபான்மையினக் கட்சிகள் ஆதரிக்கும் வேட்பாளரே வெற்றிபெறுவார். சிங்கள வாக்குகள் பலகூறுகளாக பிரியும். எனவே, சிறுபான்மையின மக்களின் வாக்குகள்தான் தீர்மானிக்கும் சக்தியாக அமையும்.” – என்றும் திகாம்பரம் கூறினார்.

Related Articles

Latest Articles