அடை மழை – கடும் காற்று – லிந்துலையில் 27 லயன் குடியிருப்புகள் சேதம்!

தலவாக்கலை, லிந்துலை – கிளனிகல்ஸ் தோட்டத்தில் நேற்று மாலை வீசிய பலத்த காற்றால் 27 லயன் குடியிருப்புகள் சேதமாகியுள்ளன. சில வீடுகள் இடிந்து விழுந்துள்ளன.

அத்துடன், மின் கம்பங்கள் முறிந்து விழுந்துள்ளன. தோட்டத்துக்கு செல்லும் பிரதான வீதியில் மரங்கள் முறிந்து விழுந்துள்ளதால் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட 75 பேர் கிளனிக்கல்ஸ் தமிழ் வித்யாலய மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான நிவாரண உதவிகளை வழங்குவதற்கு‌ தோட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

கௌசி

Related Articles

Latest Articles