‘அதிஉயர் சபையில் அடிதடி’ – விசாரணைக்கு 11 பேரடங்கிய குழு அமைப்பு!

நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் ஆராய்வதற்கும், பரிந்துரைகளை முன்வைப்பதற்கும் பிரதி சபாநாயகர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தலைமையில் விசேட குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளது.

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று இந்த அறிவிப்பை விடுத்தார்.

நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற சம்பவங்களுக்கான காரணங்களை கண்டறிவதற்கும், எதிர்காலத்தில் அவ்வாறான சம்பவங்கள் இடம்பெறாமல் இருப்பதற்கான பரிந்துரைகளை முன்வைப்பதற்குமே இக்குழு நியமிக்கப்பட்டுள்ளது.

குழுவில் இடம்பெற்றுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள்,

சமல் ராஜபக்ச
பந்துல குணவர்தன
வாசுதேவ நாணயக்கார
சுசில் பிரேமஜயந்த
கயந்த கருணாதிலக்க
ரவூப் ஹக்கீம்
அநுரபிரியதர்சன யாப்பா
விஜத ஹேரத்
ரஞ்சித் மத்தும பண்டார
எம்.ஏ. சுமந்திரன்

Related Articles

Latest Articles