அதிகாலையில் கோர விபத்து – தந்தை, மகள் பலி! தாய் படுகாயம்!!

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை 1.30 மணியளவில் இடம்பெற்ற கோர வாகன விபத்தில் தந்தையும், மகளும் பலியாகியுள்ளனர்.

சமன்குமார் (வயது -38) என்ற தந்தையும், அவரின் மகளுமே இவ்வாறு பலியாகியுள்ளனர்.

கதிர்காமத்திலிருந்து பண்டாரகம நோக்கி தெற்கு அதிவேக நெடுஞ்சாலை பயணித்த காரொன்றே மில்லனிய பிரதேசத்தில் வீதியை விட்டு விலகி இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

காரில் தாய், தந்தை மற்றும் அவர்களின் இரு மகள்மார் பயணித்துள்ளனர்.

படுகாயமடைந்த தாயும், மகளும் வைத்தியசாலையில் அனுமதிக்கபபட்டுளளனர்.

Related Articles

Latest Articles