அதிக விலைக்கு மருந்து விற்பனையா? உடன் தகவல் வழங்கவும்!

அதிக  விலைக்கு மருந்துகளை விற்பனை செய்யும் மருந்தகங்கள் தொடர்பில் தகவல்களை வழங்குமாறு மருந்து உற்பத்தி, வழங்கல் மற்றும் ஒழுங்குறுத்துகை இராஜாங்க அமைச்சு பொதுமக்களிடம் கோரியுள்ளது.

அத்தியாவசிய மருந்துகளின் விலைகள் உயர்ந்துள்ளதாகவும், அவை விலை கட்டுப்பாடின்றி விற்பனை செய்யப்படுவதாகவும் முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக அந்த அமைச்சு தெரிவித்துள்ளது.

இதேவேளை, 60 மருந்துகளின் 131 வகைகளின் விலைகளை ஒழுங்குபடுத்த சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், டொலரின் பெறுமதிக்கமைய, ஆகஸ்ட் மாதம் மருந்துகளின் விலைகளை 9 சதவீத்தில் மாத்திரம் அதிகரிக்க அனுமதி வழங்கப்பட்டது.

இதன்படி, அனைத்து அத்தியாவசிய மருந்துகளின் முறையான விற்பனை விலையை பொதுமக்கள் அறிந்து கொள்வதற்காக, மருந்துகளின் விலைப்பட்டியலை, மருந்து உற்பத்தி, வழங்கல் மற்றும் ஒழுங்குறுத்துகை இராஜாங்க அமைச்சு வெளியிட்டுள்ளது.

Related Articles

Latest Articles