அதிபர் – ஆசிரியர்களின் போராட்டம் தொடரும்! 21வரை அரசுக்கு கெடு!!

” அதிபர் – ஆசிரியர்களின் சம்பள முரண்பாட்டுக்கு தெளிவான தீர்வு திட்டம் அவசியம். எதிர்வரும் 21 ஆம் திகதிக்கு முன்னர் தீர்வு முன்வைக்கப்பட வேண்டும். ” – என்று இலங்கை ஆசிரியர் சங்கம் திட்டவட்டமாக அறிவித்துள்ளது.

கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே மேற்படி சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின், இவ்வாறு அரசாங்கத்துக்கு காலக்கெடு விதித்து, அறிவிப்பை வெளியிட்டார்.

” சம்பள முரண்பாடு தொடர்பில் அரசாங்கத்தால் முன்வைக்கப்பட்டுள்ள தீர்வுத் திட்டத்தை ஏற்கமுடியாது. சுபோதினி அறிக்கையை செயற்படுத்துமாறு கோரியுள்ளோம். அது தொடர்பில் தெளிவான பதில் 21 ஆம் திகதிக்கு முன்னர் அவசியம். அதுவரை எமது போராட்டம் தொடரும்.

அவ்வாறு தீர்வு இல்லையேல், 21 ஆம் திகதிக்கு பிறகும் போராட்டத்தை தொடர்வது குறித்து தீர்மானம் எடுக்கப்படும்.” – எனவும் அவர் கூறினார்.

Related Articles

Latest Articles