ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் போட்டியிட்டு நாடாளுமன்றம் தெரிவாகி, தற்போது சுயாதீனமாக செயற்படும் நாடாளுமன்ற உறுப்பினர்களில் சிலர் ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணையவுள்ளனர்.
அடுத்த வாரமளவில் அவர்கள் இணையக்கூடும் என தகவல் வெளியாகியுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர்களான அநுரபிரியதர்சன யாப்பா, சுதர்ஷினி பெர்ணான்டோ புள்ளே, ஜோன் செனவிரத்ன மற்றும் பிரியங்கர ஜயரத்ன ஆகியோரே, சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியில் இணையவுள்ளனர் என தெரியவருகின்றது.
