மே தின நிகழ்வுகளைக்கூட , நடத்த முடியாத நிலை, ஆளுங்கட்சியான ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு ஏற்பட்டுள்ளது – என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று தெரிவித்தார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவும், அவர் தலைமையிலான அரசும் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி இன்று 5 ஆவது நாளாக தொடரும் பாத யாத்திரையில் பங்கேற்று உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
அத்துடன், சர்வக்கட்சி இடைக்கால அரசில் ஐக்கிய மக்கள் சக்தி இணையாது என்பதையும் மீண்டும் திட்டவட்டமாக அறிவித்தார்.










