அமெரிக்கா மற்றும் ஈரானுக்கிடையிலான போரை முடிவுக்குக் கொண்டுவர அமைதிப் பேச்சுவார்த்தைகளை மீண்டும் முன்னெடுக்குமாறு திருத்தந்தை லியோ, அறைகூவல் விடுத்துள்ளார்.
போரினால் அப்பாவி மக்கள் எதிர்நோக்கும் சொல்லொணாத் துயரங்களைக் சுட்டிக்காட்டிய திருத்தந்தை, மோதல்களைத் தவிர்த்து சர்வதேச சட்டங்கள் மதிக்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
அமெரிக்க ஜனாதிபதியுடன் கருத்து வேறுபாடுகள் இருந்தபோதிலும், வெறுப்புணர்வை விடுத்து அமைதி கலாச்சாரத்தை வளர்க்குமாறு அனைத்துத் தரப்பினரையும் அவர் கேட்டுக்கொண்டார்.
லெபனான் பயணத்தின் போது தான் சந்தித்த சிறுவனொருவர் போரில் கொல்லப்பட்டதை நினைவுகூர்ந்த திருத்தந்தை, வன்முறைக்கு எதிராகத் தனது ஆழ்ந்த வருத்தத்தைப் பதிவு செய்துள்ளார்.










