அமெரிக்காவே கோட்டாவை வீட்டுக்கு அனுப்பியது – இராஜாங்க அமைச்சர் பரபரப்பு தகவல்

பிரபாகரனின் கதையை முடிப்பதற்கு பங்களிப்பு வழங்கியவர்களுக்கே அமெரிக்கா பயணத்தடை விதித்துவருகின்றது. கோட்டாபய ராஜபக்சவைக்கூட அமெரிக்காவே வீட்டுக்கு அனுப்பிவைத்தது – என்று இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார்.

சமகால அரசியல் நிலைவரம் தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

” சர்வதேச நாணய நிதியத்தை நாட வேண்டும் என எதிர்க்கட்சிகளே வலியுறுத்தின. ஆனால் அந்த தீர்மானத்தை அமுல்படுத்துவதற்கான வாக்கெடுப்பின்போது எதிர்க்கட்சியினர் சபையில் இருக்கவில்லை. இதன்மூலம் அவர்களின் நோக்கம் தெளிவாகின்றது.

புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் நாட்டுக்கு அவசியம். தற்போது புதிய சில பயங்கரவாதிகள் உருவாகியுள்ளனர். அரசிடம் சம்பளத்தை வாங்கிக்கொண்டு, விடைத்தாள் திருத்தாமல் உள்ளனர். மாணவர்களுக்கு கல்வி கற்க விடாமல் அவர்களை வீதிக்கு அழைத்துவருகின்றனர். இப்படியான பயங்கரவாதிகளும் உள்ளனர். இவர்கள்தான் புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தை எதிர்க்கின்றனர்.

அதேவேளை, பிரபாகரனின் கதையை முடிப்பதற்கு பங்களிப்பு வழங்கிய படையினருக்கு அமெரிக்கா தடை விதிப்பது வழமை.தமது நண்பர் இறந்துவிட்டதால் அவர்களுக்கு (அமெரிக்கா) கவலை இருக்கும். இதனால்தான் கோட்டாபய ராஜபக்சவை வீட்டுக்கே விரட்டினர்.” – எனவும் இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles