அமேசான் பாம்பு பூனை? – சமூக வலைதளங்களில் வைரலாகும் புகைப்படம்

அமேசான் பாம்பு பூனையின் நம்பமுடியாத புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்த புகைப்படம் “சர்பென்ஸ் கேடஸ்” என்று கூறப்படுகிறது. இது கருப்பு மற்றும் நியான் மஞ்சள் கோடுகளுடன் கூடிய பூனை. இந்த படம் உண்மையா அல்லது போலியா என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இந்த படத்தை @Kamara2R என்ற பயனர் மார்ச் 14 அன்று ட்விட்டரில் வெளியிட்டார். ஆந்த ட்வீட்டில், “பூமியில் உள்ள பூனைகளில் மிகவும் அரிதான இனம் செர்பென்ஸ் கேடஸ். இந்த விலங்குகள் அமேசான் மழைக்காடுகளின் அடைய முடியாத பகுதிகளில் வாழ்கின்றன. எனவே அவை ஒப்பீட்டளவில் மிகவும் அறிதாகவே ஆய்வு செய்யப்படுகின்றன. இந்த பாம்புப் பூனை படங்கள் 2020 ஆம் ஆண்டில் மட்டுமே வெளிவந்தன. 4 கிலோ வரை எடையுள்ளதாக இருக்கிறது.

இந்த புகைப்படத்திற்கு பல நெட்டிசன்கள் பதிலடி கொடுத்துள்ளனர். சில பயனர்கள் இது ஒரு வகை பூனை அல்ல,  ஃபோட்டோஷாப் செய்யப்பட்ட என்று  சொன்னார்கள். அதே நேரத்தில், மற்ற பயனர்களும் இதை போலி என்று அழைத்தனர். சில பயனர்கள் பாம்பு பூனை போலியானது என்று கூறினர்.  “வெளிப்படையான போலி என்று பல பயனிகள் கருத்து தெரிவித்தனர்.

Related Articles

Latest Articles