உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணையை திசை திருப்ப எதிரணிகள் நாடகம்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பான விசாரணைகளை திசை திருப்புவதற்கு எதிரணிகள் முற்படுகின்றன. அதனால்தான் பல்வேறு கதைகளும், அரசியல் நாடகங்களும் அரங்கேற்றப்பட்டுவருகின்றன என்று அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

சுஷேஷ் சலே விவகாரம் தொடர்பில் எழுப்பட்ட கேள்விகளுக்கு பதிலளித்த அமைச்சர் கூறியவை வருமாறு,

“உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்துடன் தனக்கு தொடர்பு இல்லையெனில், விசாரணைக்கு சுரேஷ் சலே ஒத்துழைப்பு வழங்க வேண்டும். நாட்டுக்காக அவர் செய்ய வேண்டிய சேவை இதுதான்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவமென்பது சாதாரண சம்பவம் அல்ல. அதனால்தான் பயங்கரவாத தடைச்சட்டத்தின்கீழ் விசாரணை இடம்பெற்றுவருகின்றது.

பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்படும். எனினும், குற்றக்குழு உள்ளிட்ட விடயங்களைக் கையாள்வதற்கு புதிய சட்டம் கொண்டுவரப்படும்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பான விசாரணைகளை திசைதிருப்புவதற்குரிய தேவைப்பாடு எதிரணி அரசியல் பிரமுகர்கள் சிலருக்கு உள்ளது. அவர்களின் நோக்கம் என்னவென்பது தெளிவாகின்றது.”- என்றார்.

Related Articles

Latest Articles