‘அமைச்சரின் மகனாக இருந்தாலும் சட்டம் தன் கடமையை செய்யும்’

ஒரு நாடு ஒரு சட்டம் நாடு முழுவதும் நடைமுறைப்படுத்தப்படுகின்றது. அது நாடாளுமன்ற உறுப்பினர் அருந்திகவின் மகனுக்கும் பொருந்தும் என அமைச்சர் நாமல் ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.

ராகம மருத்துவ பீட மாணவர்கள் தாக்கப்பட்டமை தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் அருந்திக பெர்ணான்டோவின் மகனுக்கு எதிராக நடவடிக்கை எடுக்காமலிருப்பதற்கான காரணங்கள் எதுவும் இல்லை என தெரிவித்துள்ள நாமல் ராஜபக்‌ஷ, ஜனாதிபதியிடமிருந்து மக்கள் எதிர்பார்க்கும் ‘ஒருநாடு ஒருசட்டம்’தற்போது நடைமுறைப்படுத்தப்படுகின்றது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

அருந்திக அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார், ஏதோ நடந்துள்ளது அவருடைய மகன் கைதுசெய்யப்பட்டுள்ளார். ஆகவே நாங்கள் சட்டத்தை நடைமுறைப்படுத்துவோம் என நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

சட்டத்தை மறைக்கவேண்டிய அவசியமில்லை என தெரிவித்துள்ள அமைச்சர் நாமல், அமைச்சரின் மகனாகயிருந்தாலும் சரி சாதாரண பிரஜையின் மகனாகயிருந்தாலும் சரி அவருக்கு எதிராக ஒரேநாடு ஒரே சட்டத்தின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும். மக்கள் இதனையே ஜனாதிபதியிடமிருந்து எதிர்பார்க்கின்றனர் என குறிப்பிட்டுள்ளார். தவறு செய்திருந்தால் அவர் தண்டிக்கப்படுவார்,

அப்பாவி என்றால் நீதிமன்றில் அவர் தன்னை நிருபிப்பதற்கான வாய்ப்புகள் வழங்கப்படவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இந்த சம்பவத்திற்கு பகிடிவதையே காரணம் என தெரிவிக்கப்படுகின்றது. பகிடிவதைக்கு எதிராக கடும் நடவடிக்கையை எடுக்கவேண்டும். எங்களால் ஒருபோதும் பகிடிவதையை அனுமதிக்க முடியாது- எனவும் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles